December 11, 2019 Wednesday 03.14 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 7 2019 5:52 PM

வெற்றியை துவங்குமா இந்திய அணி??? இன்று 2வது T20 போட்டி.

Posted Date : Nov 7 2019 5:52 PM

இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையான இரண்டாவது 20 ஒவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் இன்று வெற்றியை நோக்கி கலமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

டெல்லியில் காற்றுமாசு அச்சுறுத்தலைத் தாண்டிப் போட்டி நடத்தப்பட்டது. இரண்டாவது டி-20 போட்டிக்கு மஹ புயல் அச்சுறுத்தல் சூழ்ந்துள்ளது. ஆனால் இன்று மதிய நேரத்தில் அங்கு எதிர்பார்த்த மழைக்கு பதிலாக வெயில் அதிகளவில் சுட்டெரித்தது.

இந்த போட்டியை அதிக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்காகவே மஹா புயல் ஓய்வு எடுத்துக்கொண்டதாகவே தெரிகிறது. வானிலை மையம் தெரிவித்தது போல இல்லாமல், ராஜ்கோட் மைதானத்தில் வெளியில் சுட்டெரித்தது. இதற்கிடையில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை