August 09, 2020 Sunday 08.14 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 8 2019 11:06 AM

“சிவசேனா-பாஜக இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்” நிதின் கட்கரி.

Posted Date : Nov 8 2019 11:06 AM

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே பேச்சு நடத்த தயார் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மகாராஷ்டிராவின் சட்டப்பேரவையின் பதிவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

சட்டப்படி, சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆனால் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையால் மகாராஷ்டிரா அரசியலில் சிக்கல் உருவாகியுள்ளது.

இதனிடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே-வை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி இன்று சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே சமரச பேச்சு நடத்த தயார் என்று தெரிவித்துள்ளார். சிவசேனா எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சிவசேனை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை