December 06, 2020 Sunday 06.33 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 18 2019 10:28 AM

கோத்தே ராஜபக்சேவின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு நல்லதா??கெட்டதா??

Posted Date : Nov 18 2019 10:28 AM

இலங்கை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரவிருக்கும் கோத்தபய ராஜபக்சே இலங்கை தமிழர்களின் பெரிய எதிரியாக பார்க்கப்படுகிறார்.
ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியான கோத்தபய ராஜபக்சே அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். கோத்தப ராஜபக்சே 2007 மற்றும் 2009 ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவப் பிரசாரத்திற்கு தலைமை தாங்கினார். இது புலிகளின் இறுதி தோல்வி மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொலையில் முடிவடைந்தது.
ராஜபக்சே சகோதரர்கள் பயங்கரவாதத்தை தோற்கடித்தோம் என்றும் மேலும், அவ்வாறு செய்ததில் வெற்றி பெற்ற உலகின் ஒரே நாடு என்ற பெருமை கூறி வருகின்றனர்.
கோத்தே ராஜபக்சே அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.மேலும் அங்கே இவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது.இலங்கையில் அரசியலில் நல்ல பதவியை பெறுவதற்காக தன் அமெரிக்க குடியிருப்பை ரத்துசெய்து நாடு திரும்பினார்.
இவர் பெரும்பாலும் சிங்கள மக்களின் வாக்குகளையே அதிகம் பெற்று வென்றவர்.மேலும் சில தமிழர்களும் இவருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
இலங்கை ராணுவத்திலிருந்து விடுதலை புலிகளுக்கு எதிராக பல சூட்சம வேலைகளை செய்து வந்த கோத்தே ராஜபக்சே தமிழர்களுக்கு எப்படி நல்லது செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதியில் இவரின் வாக்கு சேகரிப்பு என்பது எந்தவித அறிக்கையும் இல்லாமல் முடிந்திருக்கிறது.இவரின் வருகை இலங்கையில் மீதமுள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் வகையில் தான் இருக்கும்.தமிழர்கள் குடியிருப்பு பகுதியில் சிங்களர்களையும் குடியிருக்க செய்ய திட்டமிடப்படும்.என மக்கள் ஐயம் கொள்கிறார்கள்.

ராஜபக்சே குடும்பத்திற்கு சிங்களர்களிடையே தனித்துவமான மரியாதை இருப்பதாக தெரியவருகிறது.இவர் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்ததை ஆதரிப்பார் எனவும் கருதப்படுகிறது.தேர்தல் முடிவு வந்தவுடன் பிரதமர் மோடி ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நட்பு வேண்டுவதாகவும் அறிக்கை விடுத்துள்ளார்.

இவரோடு போட்டியிட்ட சஜீத் பிரேமதேச ஐக்கிய  தேசியகட்சியை சேர்ந்தவர் ஆவார்.இவர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளித்து பேசியிருக்கிறார். இவர் அமைச்சரவையில் முக்கிய எதிர்கட்சி தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

 

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை