August 11, 2020 Tuesday 03.30 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 20 2019 6:15 AM

இணையக் கேளிக்கையால் வாசிப்பைத் துறந்த இளையத் தலைமுறை

Posted Date : Nov 20 2019 6:15 AM

மனித வாழ்வை மேம்படச்  செய்ய அவனை அறிவாளியாக்க வகுக்கப்பட்ட வழிபாதையே புத்தகங்கள்.முதலில்  பொத்தகம் என அழைக்கப்பட்ட அது பின்னாளில் புத்தகம் எனப் பெயர் பெற்றது.நிறைய ஞானிகள் உருவாக்கிய ஓலை சுவடிகள் ஒரு சேர நூல் மூலம் கோர்க்கப்பட்டதால் அது நூல் என அழைக்கப்படுகிறது.
பள்ளி புத்தகத்தை தாண்டி மற்ற கதை,நாவல்,கவிதை,வரலாறு சார்ந்த புத்தகங்கள் மனித வாழ்வை உயர்ந்த  உதவுகிறது.இன்றைய காலகட்டத்தில் இதன் நிலை மிக மோசமாக உள்ளது.சமூக வலைதளங்களும்,பொழுது போக்கும் நிறைய வந்ததன் விளைவால் புத்தகங்களை கரையான்கள் கைபார்த்துக் கொண்டிருக்கிறது.
அதிகப் படியான இளைஞர்கள்  பொழுது போக்கும் சாலையாக இணையத்தை பயன்படுத்துகின்றனர். நிறைய புத்தக வாசிப்பு பழக்கம்  முன்றைய காலத்தில் நிறைய சமுக போராளிகளையும் தலை சிறந்த மனிதர்களையும் அறிஞர்களையும் உண்டாக்கி உள்ளது. ஆனால் இந்த காலத்தவர்கள் மத்தியில் பள்ளி அறிவும்  அடிமை தனத்தை அதிகமாக கற்றுத் தருவதால் அவர்களால் கட்டம் தாண்டி சிந்திக்க முடிகிறதே தவிர ஆழமான கொள்கையும் கோட்பாடுகளும் பெற முடிவதில்லை.
       பள்ளி ஆசிரியர்களும் பிற  புத்தக வாசிப்புக்கு  ஊக்கம் தருவதில்லை.எனவே இந்த நிலைமை தொடருமாயின் நூலகங்கள் சிலந்தி பூச்சிகளின் வசிப்பிடம் ஆகிவிடும். திறக்கமுடியாத பக்கங்கள் எல்லாம் கண்ணீர் மல்க கதை பேசும். எனவே மாடர்ன் நூலக வசதியும்,புத்தகங்களை மக்களை கவரும் விதம் புதுப்பிப்பதும், அதன் தேவைகளை மக்களுக்கு புரியும் வாசகங்களை பொது இடத்தில் பதிப்பதும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் உண்டு. அதை அறிந்து அதை ஊக்கபடுத்த ஆசிரியர்கள் அதற்கு தேவையான புத்தகக்தை பரிந்துரைக்க வேண்டும்.
    ஒவ்வொரு நாளும் பள்ளிகளில் நூலகத்துக்கு என்று ஒரு அரைமணி நேரமாவது ஒதுக்கி அவர்கள் விரும்பும் புத்தகத்தை கையில் தந்து அதை படிக்க செய்ய வேண்டும். மேலும் பாடத்தில் வரும் பெரும் தலைவனின் வரலாற்றை பேசும் போது அவரை பற்றி எழுதப்பட்ட முழு புத்தகத்தின் விவரங்களை பற்றி சொல்ல வேண்டும். ரயில் நிலையங்களில்,பூங்காவில்,அரசு சார்பில் நூலகத்தை நிறுவ வேண்டும்.ஏட்டு கல்வி மட்டும் தான் வாழ்க்கையா???என்ற கேள்விக்கு பதில் இன்றைய சமுதாயம் யோசிக்க வேண்டிய கட்டாயாமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை