December 13, 2019 Friday 02.22 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 21 2019 4:51 PM

பஞ்சத்தில் ஹைதி மக்கள்

Posted Date : Nov 21 2019 4:51 PM

உலகில் ஏழ்மை நாடான ஹைதியில் உணவு தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை, பணமதிப்பு பலவீனம் மற்றும் ஊழல் அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 


நாட்டின் வறுமை நிலையை ஒழிக்க முடியாத ஹைதியின் அதிபரை பதவி விலகக்கோரி தலைநகர் போர்ட் -ஓ-பிரின்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில், ஹைதி மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.கடந்த மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகள், அரசு அலுவலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.நாடே கலவர பூமியாக மாறிவருகிறது.
.
இந்நிலையில் நாட்டில் மூன்றில் ஒருபங்கு மக்கள் அவர்களின் அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதை பெரும் சவாலாக கொண்டுள்ளனர் என உலக உணவு திட்ட அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை