January 23, 2020 Thursday 11.58 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 23 2019 11:59 AM

மகாராஷ்டிராவில் அரசியல் குளருபடி தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார் !!!

Posted Date : Nov 23 2019 11:59 AM

மகாராஷ்டிராவில்  எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், பதவியேற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், பதவியேற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் உறுதிமுடிவை எட்டியதாகவும், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவே முதல்வராக இருப்பார் என்று நேற்றைய தினம் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை