December 13, 2019 Friday 04.15 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 25 2019 12:34 PM

மகாராஷ்டிரா ஆட்சியமைப்பு தொடர்பான வழக்கு நாளை தீர்ப்பு

Posted Date : Nov 25 2019 12:34 PM

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக சிவ சேனா - தேசிவாத காங்கிரஸ் - காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் பகத் சிங் கோஷியாரி சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, தேவேந்திர ஃபட்னவிஸுக்கு பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்தே, அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததாகத் தெரிவித்தார்.
தேவேந்திர ஃபட்னவிஸுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும், அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எனவே, ஆளுநரின் நடவடிக்கை சட்ட ரீதியிலானது என்றும், அதில் எவ்வித தவறும் இல்லை என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார்.
தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான அரசுக்கு 170 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளதாக பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவரான அஜித் பவார், தனது கட்சி எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கால அவகாசம் அளிப்பதை நீதிமன்றம் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என்று கூறினர்.
 

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை