July 04, 2020 Saturday 04.02 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 28 2019 7:38 AM

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் முறை !!!

Posted Date : Nov 28 2019 7:38 AM

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் வழியே வாகனங்கள் கடந்து செல்ல வருகிற ஒன்றாம் தேதி முதல் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை போன்று, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், அதேமுறையில், கட்டணம் வசூலிக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
   சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி சாலை, துரைப்பாக்கம்-குரோம்பேட்டையை இணைக்கும் ரேடியல் சாலை உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், ஃபாஸ்ட்டேக் கட்டண நுழைவு வாயில்களை விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    இதன்படி, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், மொத்தமுள்ள நுழைவு வாயில்களில், பாதிக்குப் பாதியை  ஃபாஸ்ட்டேக் கட்டண வசூல் முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை