December 13, 2019 Friday 04.40 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 28 2019 1:34 PM

பெரும்பாலான அரசு மருத்துவமனையில் கழிப்பறையில்லையாம் !!! ஒத்துக்கொள்கிறது அரசு

Posted Date : Nov 28 2019 1:34 PM

     நாடாளுமன்ற  கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதிலளித்து பேசினார்.
    அப்போது, “நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கழிவறை மோசமாக சுகாதாரமின்றி இருப்பதாகவும், சில மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் இல்லை என்றும், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற கிராம அரசு மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். 
   நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 72,000 மருத்துவமனை கழிவறை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாகவும், 1,15,000 அரசு மருத்துவமனைகளில் ஆண் - பெண் நோயாளிகளுக்கு என தனித்தனி கழிவறை வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
    இதனை பற்றி  சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகையில், “கடந்த 6 ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறிவருகிறது. ஆனால் அதில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்பது மத்திய அமைச்சரின் இந்த தகவல் தெளிப்படுத்துகிறது.


 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை