December 13, 2019 Friday 04.16 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 28 2019 3:15 PM

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்து சேவைபெறுவதில் தமிழகத்திற்கு இத்தனையாவது இடமா !!

Posted Date : Nov 28 2019 3:15 PM

தமிழகத்தில்  62 % பேர் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தே தேவையான சேவைகளை பெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  TRANSPARENCY INTERNATIONAL என்ற நிறுவனம் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ஊழல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. 20 மாநிலங்களில் மொத்தம் 1,90,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் ஊழல் அதிகமுள்ள மாநிலத்தில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.  இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த பட்டியலில் 6-வது இடம் பிடித்துள்ளது. லஞ்சம் குறைவாக உள்ள மாநிலமாக கேரளா இருக்கிறது.தமிழகத்தில் 100-ல் 62 பேர் அரசு அலுவலகங்களில் தங்களது காரியம் ஆக வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக நிலம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக 41 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுக்கின்றனர்.நகராட்சி நிர்வாக பணிகளில் காரியம் ஆவதற்காக 19 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக காவல்துறைக்கு 15 சதவிகிதம் லஞ்சம் அளிக்கப்படுகிறது.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை