December 13, 2019 Friday 02.27 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 28 2019 3:42 PM

மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted Date : Nov 28 2019 3:42 PM

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சல் மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை ஆணையர் டேவிட் தேவாசீர்வாதம் தலைமையிலான சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நான்கு சித்திரை வீதி மற்றும் ஆடி வீதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதிகப்படியான சோதனைக்கு பின்பே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், மின்னஞ்சலின் உண்மைதன்மை குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை