December 13, 2019 Friday 02.57 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 28 2019 4:34 PM

தேனியில் மரங்களை காக்க “ஆணி பிடுங்கும் திருவிழா”

Posted Date : Nov 28 2019 4:34 PM

            தேனி மாவட்ட தன்னார்வ அமைப்பினர் மற்றும் உத்தம பாளையம் தேசிய நெடுஞ்சாலை முதல் நிதி மன்றம் வரைஇன்று திருவிழா சிறப்பாக அமைய உதவிய தேனி ரூரல் அப்பிளிமண்ட் சோஷியல் டிரஸ்ட்,நேதாஜி அறக்கட்டளை,முல்லை நில நண்பர்கள், சோலைக்குள் கூடல், விஜய் மக்கள் இயக்கம் , தேனீக்கள் தன்னார்வலர்கள் மற்றும் காவல் துறை ஒன்றினைந்து ` “ஆணி பிடுங்கும் திருவிழா” என்கிற பெயரில், மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மரங்களில் உள்ள ஆணியை பிடுங்கி வருகின்றனர். 
            இந்த நிலையில், கடந்த வாரம், விளம்பரப் பலகைகளைத் தாங்கி நிற்க மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளைப் பிடுங்கும் நோக்கோடு, `ஆணி பிடுங்கும் திருவிழா’ என்ற இயக்கத்தை உருவாக்கி, மாவட்டம் முழுவதிலும் உள்ள சாலையோர மரங்களில் ஆணி பிடுங்கிவருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதிய ஒத்துழைப்பு தேவை என்கின்றனர்.
        ஒரு மரத்தில் 120 முதல் 150 ஆணிகள் வரை அடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் 6.5 கிலோ ஆணிகள் பிடுங்கப்பட்டன. இந்த வாரம் 7.6  கிலோ ஆணிகள் பிடுங்கப்பட்டன. வாரா வாரம் ஆணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்த இளைஞர்களின் இச்செயல் நாளைய தலைமுறை மீது அவர்கள் காட்டும் அக்கறையையும்,பசுமை சார்ந்த அவர்களின் ஆர்வத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளது குறிப்பிடதக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை