December 13, 2019 Friday 02.56 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 28 2019 5:02 PM

சந்திரபாபு நாயுடு சென்ற வாகனத்தின் மீது காலணிகளை எறிந்த விவசாயிகள் !!!

Posted Date : Nov 28 2019 5:02 PM

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்து மீது காலணிகள் மற்றும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
     தலைநகர் அமராவதிக்கான கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கு பேருந்தில் சந்திரபாபு நாயுடு இன்று சென்றார். வேங்கடபாலம் ((Venkatapalem)) எனுமிடத்தில் பேருந்து வந்தபோது, அங்கு வந்த விவசாயிகள் சிலர், பேருந்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். பின்னர் அந்த பேருந்தின் மீது காலணிகளையும், கற்களையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது. அப்போது அங்குவந்த தெலுங்கு தேசம் கட்சியினர், காலணிகளை வீசி தாக்குதல் நடத்திய நபர்களை விரட்டியடித்தனர்.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை