July 13, 2020 Monday 06.19 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 2 2019 6:49 AM

மேட்டுபாளையத்தில் கனமழையால் 17 பேர் பலி

Posted Date : Dec 2 2019 6:49 AM

மேட்டுப்பாளையம் அருகே கனமழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

    கோவை  மேட்டுப்பாளையம் அருகே கனமழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
     கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஏரி காலனி பகுதியை சேர்ந்த அருக்காணி என்பவரது வீட்டின் கல்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அருகே உள்ள ஓவியம்மாள், சிவகாமி உள்ளிட்ட 3 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அருக்காணி, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, ஹரிசுதா உள்ளிட்ட 7 பெண்கள், 2 சிறுவர்கள் என 17 பேர் பலியாகினர். 
இதற்கிடையே, தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் கிடந்த சடலங்களை ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை