December 13, 2019 Friday 02.22 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 2 2019 4:31 PM

சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு !!

Posted Date : Dec 2 2019 4:31 PM

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியான பொன்.மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது.

அந்த மனுவில், பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது.  பொன்.மாணிக்கவேலுக்கு பதிலாக நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமிக்கிறோம் என்று தமிழக அரசு தெரிவித்தது.

பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பொன்.மாணிக்கவேல், ராமசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது.

பொன்.மாணிக்கவேல் பதவியை நீட்டிக்க கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன? என்று பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு, "சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு கிடையாது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அக்கறை இருந்ததால் என்னை நியமித்து செயல்பாடுகளை கண்காணித்தது" என்று பொன்.மாணிக்கவேல் தரப்பில் கூறப்பட்டது.  இதன்பின்பு, சிலை கடத்தல் ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கும்படி, பொன்.மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை