January 25, 2020 Saturday 01.09 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 5 2019 3:53 PM

அடுத்த இரு தினங்களில் சென்னை மற்றும் சில பகுதியில் மழைக்கு வாய்ப்பு!!!

Posted Date : Dec 5 2019 3:53 PM

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது அது சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த வார இறுதியில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கனமழை பெய்தது. தற்போது அது குறைந்திருக்கிறது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிறவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகம், புதுவை மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது தான் வட தமிழகம் என்பது குறிப்பிடத் தக்கது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 4) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை