October 22, 2021 Friday 06.26 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 5 2019 5:33 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted Date : Dec 5 2019 5:33 AM

05.12.2019 முதல் 18.12.2019 வரைக்குள் தேர்வர்கள், தங்கள் சான்றிதழ்களை கணினி மூலம் பதிவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
tnpsc memo for certificate verification 2019  :  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.என்.பி.எஸ்.சி), நவம்பர் ஒன்றாம் தேதி குரூப் 4 தேர்வு முடிவுகளையும் , நவம்பர் 12ம் தேதி ரேங் பட்டியலையும் வெளியிட்டது.
இதன் அடிப்படையில், கடந்த மாதம் 30ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி  யார் யாரெல்லாம் சான்றிதழ் அழைப்பிற்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்ற பட்டியலையும் வெளியிட்டது.
TNPSC Group 4 Certificate Verification List  – உங்கள் பதிவு எண் இதில் உள்ளனவா? என்பதை முதலில் செக் செய்து கொள்ளுங்கள்.
TNPSC  cv memo group 4 2019:
மேலும், இந்த குரூப் 4 பணி சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பிற்கு வகுப்பு வாரியான பட்டியலையும் (COMMUNAL CATEGORY‐WISE OVERALL RANK ) டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், தங்கள் சரிபார்ப்பு ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவா மையங்களுக்கு சென்று தங்களது மூலச் சான்றிதழ்களை கணினி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை