January 25, 2020 Saturday 02.08 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 6 2019 1:55 PM

“மனித சமத்துவத்தின் மாபெரும் தந்தை” அண்ணல் அம்பேத்கர் !!!

Posted Date : Dec 6 2019 1:55 PM


இயற்பெயர் : பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956


அம்பேத்கர்  ஒரு மனிதன் தன் சமூகத்தை உயர்த்த அறிவாற்றல் மிக்க இனமாக மாற்ற எவ்வளவு வாசிக்க வேண்டும்.அவ்வளவு வாசித்திருக்கிறார்.
தன் இளமை பருவத்தில் தான் சந்தித்த சாதிய அவமானங்களை படிப்பால் மட்டுமே எதிர்த்து நிற்க முடியுமோ அப்படி நின்றிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து   வெளி நாடுகளுக்கு  பட்டம் படிக்க   முதன் முதலில் சென்ற ஆளும் இவர் தான்.
1930ல் நடந்த வட்டமேசை மாநாட்டை புறங்கணித்தவரும் இவர் தான்.1931ல் நடந்த தனது பெயரை தனது நற்செயலால்  சேர்க்க வைத்த மாமனிதர்.

இந்திய அரசிலைமைப்பு சட்டத்தை ஒரு மனிதனால் இயற்ற முடியுமெனில் அது ஒன்றும் சாதாரண காரியமில்லை.இதன் பின்பான அறிவும் உழைப்பும் அளப்பரியது.

யார் யார் எல்லாம் அவரை மாட்டு வண்டியிலிருந்து தள்ளி விட்டார்களோ?
யார் யார் எல்லாம் அவருக்கு ஒதுங்க
இடம் கொடுக்க மறுத்தார்களோ??
யார் யார் எல்லாம் அவரை வகுப்பறையில் 
புறங்கணித்தார்களோ???
அவர்களெல்லாம் இன்று இவரின் புகைப்படத்தை அண்ணாந்து பார்க்காமல் கடந்து விட முடியாது.

இந்தியாவின் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட மனிதர்களில் முதன்மையானவர். தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
    வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப அவர் குணம் மாறும்; ஆதரவும் மாறும்; ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”,
பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார்.
1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் [25] 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்கநேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

   சாதிய வேறுபாடு கடந்து அனைவரும் இவரை கொண்டாட வேண்டும்.ஆம் இவரின் உழைப்பை கண்டு பூரிக்க வேண்டும்.

இவரை அறிய வாசிக்க வேண்டும்!!!!இவரையும்,இவரின் நூலையும்...
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை