August 09, 2020 Sunday 10.39 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 6 2019 11:58 AM

“உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் மாற வாய்ப்பு” தேர்தல் ஆணையம்!!!

Posted Date : Dec 6 2019 11:58 AM

உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்க உத்தரவிடக் கோரி திமுக மற்றும் செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.


2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறுவரையறை பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் அவர் கூறினார். அப்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால், மறுவரையறை செய்ய வேண்டாமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, அதற்கான அவசியமில்லை என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நரசிம்மா தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கை அடிப்படையிலேயே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசின் சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி 9 புதிய மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றார். புதிய மாவட்டங்களில் மறுவரையறை முடியாத நிலையில் தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது வார்டு மறுவரையறை அவசியம் என்றார்.

மறுவரையறை முடியாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது ஏன்? சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ, அதன்படியே உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், குறுக்கு வழியில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தக்கூடாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை