August 11, 2020 Tuesday 04.02 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 9 2019 7:13 AM

திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர்களின் மெத்தன போக்கினால் சமூகப் பிரச்சனையாக மாறும் அவலங்கள்

Posted Date : Dec 9 2019 7:13 AM

திருப்பத்தூர்  மாவட்டம், பழைய கந்திலி ஒன்றியம்,  தற்போது புதிய கொரட்டி ஒன்றியம், செவ்வாத்தூர் ஊராட்சி காமராஜர் நகரில் இருந்து சாலூர் கிராமத்திற்கு செல்லும் சாலையின் மத்தியில் உள்ள  சர்வே எண்: 30 A அரசுக்கு சொந்தமான குலத்தை அனுமுத்து முன்னாள் சாராய வியாபாரி ஆக்கிரமித்து வருகிறார் மற்றும் அதனை ஒட்டி சர்வே எண்: 80 அரசுக்கு சொந்தமான நிலத்தை பல வருடங்களாக ரத்தினவேல் என்பவர் போலியான பட்டா, சிட்டா மற்றும் இதர ஆவணங்களை திருப்பத்தூர் உதவி வட்டாட்சியர் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பொது மக்களின் போக்குவரத்து சாலையை ஒட்டி மிகவும் ஆபத்தான நிலையில் கிணறு தோண்டி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றார் 
இவர்கள் இருவருக்கும் சொந்தமாக பல ஏக்கர் நிலம் மற்றும் பம்புசெட் கிணறு மற்றும் ஆழ் துணை கிணறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருந்தாலும் அரசு நிலம் மற்றும் குளத்தையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை பொது நலம் கருதி திரு. உ. சகாயம். ஐஏஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும் மக்கள் பாதை இயக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து கடந்த இரண்டு வருடங்களாக பல முறை திருப்பத்தூர் சார் ஆட்சியர், வேலூர் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்து சர்வே எண்: 80 ல் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற படிவம் 6 மற்றும் படிவம் 7 வழங்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலர்கள் மூலமாக ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அரசியல்வாதிகளின் பின்புலத்தால் இன்றுவரை ஆக்கிரமிப்பை அகற்றப்படவில்லை இதற்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலர்களும் ஒரு சிலர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக இதன் மூலமாக தெரிய வருகின்றது. இதற்கு மத்தியில் மக்கள் பாதை இயக்கத்தினருக்கும் , இது சம்பந்தப்பட்ட ஊர் பொதுமக்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நபர்கள் மூலமாக பொய் புகார் அளிப்பது போன்ற பல அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன மேலும் சர்வே எண்:80 அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்ரமிப்பு செய்துகொண்டு இருப்பவர்கள் யார் என்றால் சமீபத்தில் சேலையூர் அடுத்த செம்பாக்கம், ஏரிக்கரை தெரு மூன்றாவது மாடியில் இருந்து  முதல் மனைவியின் குழந்தை ராகவியை தூக்கி வீசி கொலை செய்யப்பட்ட கொடூர சித்தி சூரிய கலாவின் தாய், தந்தையினர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த  கொடூர கொலைக்கு முக்கிய  காரணம் கொடூர கொலைகாரி சூரிய கலாவின் தாய் மதனா அவர்களின் தூண்டுதல் பேரிலேயே அந்தக் கொலை செய்யப்பட்டதாக அவருடைய மருமகனே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ரத்தினவேல் அவர்களின் மனைவி மற்றும் கொடூர கொலைகாரி சூரிய கலாவின் தாய் மதனா அவர்கள் 6.11.2019 அன்று காலை ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
அது என்னவென்றால் அவர்களே அந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில்  மாடுகளை மேய்த்து விட்டு அந்த நிலத்தில் அருகில் உள்ளவர்கள் தான்  மாடு விட்டு நிலத்தில் உள்ள பயிர்களை மேய்து விட்டதாக அந்த நிலத்தில் அருகிலுள்ள புங்க மரத்தில் மன உளைச்சல் காரணமாக புடவையை பயன்படுத்தி தூக்கில் தொங்கி இறப்பதாக அனைத்தும் திட்டமிட்டு முன்கூட்டியே ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்து கணவரை அருகிலேயே வைத்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவர் கணவர் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பியதாக    மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றி வாக்குமூலம் அளித்துள்ளார் இதற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்து பொய்யான வாக்குமூலமாக நாடகம் நடத்தி வருகின்றனர் இதற்கு காவல்துறையினர்களின்  பங்களிப்பும் உள்ளதாக தெரிகிறது.
இது போன்ற நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இதற்கு முழு பொறுப்பு திருப்பத்தூர் வட்டாட்சியர் அவர்களின் மெத்தன போக்கு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் காலதாமதம் ஏற்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம். மேலும் இதுபோன்று தொடர்ந்து அச்சுறுத்தல்கள் படாதவாறு உடனடியாக இந்த இரண்டு ஆக்கிரமிப்புகளையும் அகற்றி பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் வழிவகை செய்யுமாறு  பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்..
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை