August 11, 2020 Tuesday 03.54 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 9 2019 12:51 PM

இயற்கை விவசாயத்தின் தாத்தா நம்மாழ்வார் ஒரு சகாப்தம் !!!

Posted Date : Dec 9 2019 12:51 PM

    இயற்கை விவசாயம்  என்பது  இந்த சமூகத்தின்  முக்கியமான பங்காய் விளங்குகிறது செயற்கை உரங்களை அடித்தே இந்த மனித சமூகத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நாளைய தலைமுறைக்கான உணவு நல்ல உணவாக அமையுமா என்பது சந்தேகமாய் தான்  இருக்கிறது.இவற்றை எதிர்த்துப் போராடியவர் தான் நம்மாழ்வார் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலை பல்கலை கலகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை முடித்தார்.
    பசுமை புரட்சி, தொழில்மயமாக்கம் ,சூழல் மாசடைதல் தொடர்பான விமர்சனங்களை முன் வைத்தவர். இயற்கை வழி வேளாண்மை தான் நாளைய சமுதாயத்திற்கு முக்கியம் என்பதை உணர்த்தியவர்.பூச்சிக்கொல்லிகள் மூலம் நமது இயற்கை விவசாயம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில் ஒவ்வொரு  ஊராக நடைபயணமாக  சென்று தன்னால் முடிந்தவரை எவ்வளவு பங்காற்ற முடியுமோ அவ்வளவு பங்காற்றினார்.நம்மாழ்வார் தனது இளமைப் பருவத்தில் மசனோபு அவர்களின்  ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் புத்தகத்தை வாசித்து அதன் பாதிப்பில் தானும் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக இறங்கினார் 

        பூச்சிக்கொல்லிகள் ,மீத்தேன் வாயு திட்டம் ,மரபணு சோதனைகள், பிடி கத்தரிக்காய்க்கு அனுமதி இவற்றுக்கு எதிராக போராடியவர் .நம்மாழ்வார்  இன்றைய இளைய சமூகத்தின் மீது அதீத  நம்பிக்கை உள்ளவர்  .அவர்களே முன்னோக்கி நடத்துவார்கள் என்ற திருப்தியும் அவருக்கு உண்டு. வானகம் எனும் ஒரு இயற்கை அமைப்பை உருவாக்கிய தாத்தா அதற்கு இளைஞர்களை அழைத்து முடிந்த அளவிற்கு இயற்கை விவசாயத்தை பற்றி  பயிற்சி வழங்கி கொண்டிருக்கிறார். 
    1938 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2013ஆம் ஆண்டு காலமானார் ஆனால் இவர் வாழ்ந்த காலத்தில் தனது வயது முதிர்ந்த காலத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து மக்களுக்காக போராடினார் .தமிழகத்தில் இயற்கை அறிவு சார்ந்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு முன்னால் நிற்பவர் இவராகத்தான் இருப்பார்.இன்று பெரிய தனியார் நிறுவன ஊழியர்களும் ,வெளிநாட்டில் வேலை செய்பவர்களும் ஐடி துறையில் வேலை செய்பவர்களும் இவரை முன்னோடியாக எடுத்துக் கொண்டு இயற்கை விவசாயத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான  காரணம் இவரின் இயற்கை விவசாய பயிற்சி தான் என்றும் நம்மாழ்வார் எழுதிய  புத்தகங்கள் தான் என்றும்  நிறைய இளைஞர்கள் கூறுவதுண்டு இவரை வழி நடத்திச் என்றால் இயற்கை விவசாயத்துக்கான வழிமுறைகளை பயன்படுத்தி சாதனை  செய்ய முடியும் என்பது கூற்று.

   “  வானுயர நாம் பறக்க விட்டுக் கொண்டிருக்கும் எந்த ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியில் நமது நாளைய சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவாது”
 என்பது இவருடைய ஆழ்ந்த கருத்து நாம் அதுவும் உண்மைதான் தொழில்மயமாக்கம் என்பது நமது மக்களின் வாழ்வியல் பணம் சார்ந்த ஒரு விஷயமாக கருதப்படுகிறது. மேலும் நகரமயமாக்கப்படுதல், கிராமங்கள் அழிக்கப்படுதல் போன்ற காரணிகள் மூலமாக விவசாயம் அழிந்து கொண்டே வருகிறது .ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் .அவர்கள் உண்ணும் உணவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லிகளால் பல நோய்களை சந்தித்து வருகிறார்கள் .
     ஒற்றுமை என்பது இளைஞர்களிடம் மிகவும் எளிதாக வந்து விடுகிறது அவருடைய  முக்கிய நோக்கம் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் காந்தி ,அப்துல் கலாம் இவர்கள்  சொன்னது தான் கிராமங்கள் வளர்ச்சியே  ஒரு நாட்டின் இன்றைய வளர்ச்சி அதை எடுத்து சொல்லும் விதையாக  நம்மாழ்வாரின் வாழ்க்கை அமைந்துள்ளது. 

    இன்றைய இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தின் மீதான அன்பு அதிகமாக  உள்ளது. ஆனால் குடும்ப சூழ்நிலை பணம் கௌரவம் போன்ற சில காரணிகளால் அவர்கள் நகரத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே பல தொழிற்சாலைகள் மத்தியில் கூட்டங்கள் கூட்டங்களாக பணம் தேடி பிழைக்க படபடப்போடு  திரிகிறார்கள் .அவர்களுக்கு பூர்வ தொழிலான விவசாயத்தைப் பற்றிய போதிய அறிவு இல்லை. ஆனால் ஆர்வம் இருக்கிறது இதற்கு முன்னால் நிற்பவர் முதலாக நிற்பவர் நம்மாழ்வார் தான். அந்த அழகான இயற்கை சூழலை விட்டு எந்த ஒரு இளைஞனுக்கும் இங்கே அதாவது இந்த நகரத்தில் பணிபுரிய மிகவும் எரிச்சலாக தான் இருக்கும் மாறும்,கனவுகள் நமது இளைஞர்களை நம்பிக்கையின் பாதையில் இழுத்துச் செல்வர். இந்த சமூகம் கியூபாவில் போல் ஒருநாள் இயற்கை விவசாயத்தில் மிதந்து கிடக்கும்.நம்பிக்கை வைப்போம் பசுமையே எம் சமூகத்தின் ஆணிவேர் என உரக்கச் சொன்ன  நம்மாழ்வார் வாக்கு பலிக்கட்டும்.

--சிபி சரவணன் 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை