August 11, 2020 Tuesday 03.04 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 10 2019 6:11 AM

இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பிரச்சனை துவங்கியது ஏன்??மதவாத அரசியல் நடத்துகிறதா பாஜக ??

Posted Date : Dec 10 2019 6:11 AM

          இந்தியாவில் கடந்த சில நாட்களாக இந்திய அரசியலமைப்பு குடியுரிமை சட்ட திருத்த மசோதா  பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .இது சம்பந்தமாக லோக்சபாவில் பல கட்சிகள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.சரி !!! இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் என்ன ??
        1955ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து குடியேற  வேறு நாட்டவர்கள் இந்தியாவில் தங்கினால் அவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவார்கள் .மேலும் அவர்கள் 11 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருந்தால்  அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். இது எல்லா மதத்தவருக்கும் சமமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியின் பின் இந்த சட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது .சில நாட்களுக்கு முன் பாஜகவின் சார்பில் புதிய இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பிறப்பிக்கப்பட்டது.அதன்படி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய சீக்கியர்கள் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை சட்டம் வழங்கப்படும் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 
 

எதிர்ப்பின் காரணம் ?
      இதற்கு சிவசேனா திமுக மற்றும் இஸ்லாமிய கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்றால்  மசோதாவின்படி இந்துக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் அரசு ஏன் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய மற்ற இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளது .சட்டசபையில் இஸ்லாமிய கட்சியினர் களும் பிற கட்சியினர் களும் இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வருகின்றனர். 


அசாம் மக்களின் எதிர்ப்பு 
         இதனைத்தொடர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் போன்ற மாநிலங்களில் வந்து குடியேற கூடிய வங்கதேச வெளிநாட்டவர்களை மக்கள் அனுமதிக்க எதிர்க்கிறார்கள் காரணம் ஆறுகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் அசானினுடைய கலாச்சாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பது அவர்கள் கருத்தாக கருதப்படுகிறது. மேலும் சிறுபான்மையினருக்கு சரியான சட்ட திருத்தமும் வழங்கப்படவில்லை மதத்தின் ரீதியாக இந்த சட்டம் மனிதர்களை பிரிக்கிறது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் அனுமதி இல்லையா?
          மேலும் இலங்கையில் உள்ள தமிழர்கள் முஸ்லிம் போன்றவர்களுக்கு ஏன் இந்த சட்டம் செல்லுபடியாகாது என்று திமுக சார்பாக டி ஆர் பாலு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.அதன்படி இந்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது .அதற்காக  எதிர்கட்சிகள் தீவிரமாக  பிரச்சனை செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 ஏன் முஸ்லிம்கள் குடியுரிமை சட்டத்தில் சேர்க்கப்படவில்லை ??

         பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகள் முஸ்லிம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நாடுகளாக இருப்பதால் அங்குள்ள சீக்கிய மதம்,புத்த மதம் ஆர்சி கிறிஸ்தவ மதங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.ஆனால் முஸ்லிம்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை எனவே  இந்த சட்ட மசோதா சரியானதுதான் என்கிறார் உள்துறை அமைச்சர்  அமித்ஷா. மேலும் பேசிய காங்கிரஸ் அமைச்சர்  இந்தியாவின் மதச்சார்பின்மையை உண்டாக்குவதாக  வைப்பதாக கூறி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் பாகுபாடு காட்டுவதாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள்.இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவுக்கு முஸ்லிம்கள் எந்த தொடர்பு இல்லை பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது மசோதா விரும்புகிறது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிலை ஏன் ?
          இந்தியாவின் சில விலக்கப்பட்ட பகுதிகளிலும்  நுழைவு அனுமதி படிவம் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்ட திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இது 0.01 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிலை தீவிரவாதிகளுக்கு எதிரானது என்கிறார்கள். சட்டசபையில்  223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தும்,  எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.இதில் அதிமுக பாஜக விற்கு ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை