August 11, 2020 Tuesday 04.12 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 10 2019 8:23 AM

எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.110

Posted Date : Dec 10 2019 8:23 AM


எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் மதுரையில் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தமிழகத்தில் வெங்காய தட்டுப்பாடு காரணமாக எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 60 டன் வெங்காயம் விமானம் மற்றும் கப்பல் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் மதுரை பரவை பகுதியில் உள்ள காய்கறி அங்காடிக்கு எடுத்து செல்லப்பட்டன.  
அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் எகிப்து வெங்காயம் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், நாட்டு வெங்காயத்தை போன்று ருசியாக இல்லையென்று மக்கள் கருதுவதால் அதனை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதாகவும், உணவகங்களும் இந்த வெங்காயத்தை வாங்க முன்வருவதில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் வெங்காய இறக்குமதியால் இந்தியாவில் வெங்காய விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். 
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை