January 25, 2020 Saturday 02.08 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 10 2019 1:55 PM

ஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்?

Posted Date : Dec 10 2019 1:55 PM


பெரம்பலூர் அருகே ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. பெரம்பலூரை அடுத்த ஆலம்பாடி ஊராட்சி சொக்கநாதபுரம், செஞ்சேரி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. இந்நிலையில் கிராம முக்கியஸ்தர்கள், ஊராட்சித் தலைவர் பதவியை செஞ்சேரி கிராமத்திற்கும், துணை தலைவர் பதவியை சொக்கநாதபுரம் கிராமத்திற்கும் ஒதுக்கி ஏலம் விட்டனர்.
 அதன்படி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இதில் தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதனை அடுத்து, 25 லட்ச ரூபாய் நிதி கிராம வளர்ச்சிக்காக செலவிடப்பட உள்ளது. ஏலத்தில் வெற்றிபெற்றவரை ஒருமனதாக ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு கிராம மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை