August 11, 2020 Tuesday 03.16 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 10 2019 8:27 AM

திருவண்ணாமலையில் இன்று தீப விழா!

Posted Date : Dec 10 2019 8:27 AM

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அதிகாலையில் கருவறை முன்பாக ஏற்றப்பட்டது.

இதற்காக நள்ளிரவு முதலே அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. 

கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக வரும் பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் வெளி ஊர்களில் இருந்து வர 2 ஆயிரத்து 600 சிறப்புப் பேருந்துகளும், திருவண்ணாமலை விழுப்புரம் மார்க்கத்தில் 22 சிறப்பு ரெயில்களும் இயக்கபடுகின்றன. பக்தர்கள் பாதுகாப்பதற்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை