August 11, 2020 Tuesday 03.11 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 10 2019 8:31 AM

நெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்!!! தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Posted Date : Dec 10 2019 8:31 AM


நாடுமுழுவதும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் தயாரிக்கப்படவோ, இருப்பு வைத்திருக்கவோ, பயன்படுத்தப்படவோ இல்லை என்பதை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், பொது இடங்களில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை