August 11, 2020 Tuesday 02.55 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 10 2019 10:33 AM

முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு !!

Posted Date : Dec 10 2019 10:33 AM

முல்லை பெரியாறு அணையில், மழை கால பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அணையின் நீர்மட்டம் தற்போது சுமார் 128 அடியாக உள்ள நிலையில்  தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அணைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணை கண்காணிப்பு குழு அதிகாரிகள், படகுகளில் பயணித்துச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவுநீர் உள்ளிட்டவை குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அறிக்கைகள், மூவர் கண்காணிப்புக் குழு தலைவர் குல்சன்ராஜ்க்கு அனுப்பிவைக்கப்படும்.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை