January 29, 2020 Wednesday 01.30 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 12 2019 12:25 PM

“நல்ல மனநிலையில் இருந்தால் பேட்ஸ்மேனால் எந்த பார்மெட்டிலும் சிறப்பாக ஆட முடியும்”விராட் கோலி பேட்டி

Posted Date : Dec 12 2019 12:25 PM

   3வது டி20, ஒருநாள்,  20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தத் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் கோலி, ``முதலில் பேட்டிங் செய்தும்வெற்றி பெறுவது குறித்து நிறைய பேசினோம். போட்டி தொடங்கும் முன்பு, பேசியதை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. முதலில் பேட்டிங் செய்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் அது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது. எங்கள் இரண்டாவது திருமண நாளில் மிகச் சிறப்பாக செயல்பட முடிந்தது கூடுதல் மகிழ்ச்சி.

டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து ஃபார்மெட்டிலும் விளையாடுவது பற்றி கேட்கிறார்கள். எல்லாம் ஒரு மனநிலைதான். அதைச் சரியாக பொருத்திவிட்டால் வெற்றிதான். டி20 உலகக் கோப்பை தொடரும் வருகிறது. கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் செயல்பட வேண்டும்.

பிட்சை பொறுத்து நமது ஆட்டம் இருக்க வேண்டும். பிட்ச் சாதகமாக இருக்கும்போது நிச்சயம் பவுண்டரிகள் கிடைக்க வேண்டும். ஒரு 20-25 ரன்கள் கூடுதலாக இருந்தால் எப்போதும் அதிக நம்பிக்கையுடன் செயல்பட முடியும். அந்த வகையில் இந்தப் போட்டி ஒரு நல்ல பாடம். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை விளையாடுவது குறித்து அணிக்குள் ஆலோசனைகள் நடத்த வேண்டும்.

அங்குள்ள மைதானங்கள் பெரியது. அங்கு எப்படி இலக்குகளை நிர்ணயம் செய்வது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். மீண்டும் சொல்கிறேன், பேசுவது மட்டும் பலன் தராது. அதை களத்தில் சரியாக செய்து காட்ட வேண்டும்” என்றார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை