December 03, 2021 Friday 10.04 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 12 2019 6:59 AM

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!!

Posted Date : Dec 12 2019 6:59 AM

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

அக்.1 முதல் இன்று வரை, தமிழ்நாட்டில் இயல்பான மழை அளவு 40 செ.மீ. ஆகும், ஆனால் 43 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட இது 6 விழுக்காடு அதிகம்.  

சென்னையில் இயல்பான மழை அளவு 68 செ.மீ. ஆனால் கிடைத்துள்ள அளவு 58 செ.மீ. மட்டுமே. இது இயல்பைவிட இது 14 விழுக்காடு குறைவாகும். புதுவையை பொறுத்தவரை இயல்பான மழை அளவு 77 செ.மீ. ஆனால், கிடைத்துள்ள அளவு 54 செ.மீ., இது இயல்பைவிட 30 விழுக்காடு குறைவாகும்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை