February 22, 2020 Saturday 12.56 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 14 2019 11:43 AM

கொடைக்கானலில் ஒரு குடும்பமே ரயில் மீது மோதி தற்கொலை !!

Posted Date : Dec 14 2019 11:43 AM

திருச்சி மாவட்டம், உறையூரைச் சேர்ந்த உத்தராபதி, அவரது மனைவி சங்கீதா, 18 வயதான மகள் அபினயஶ்ரீ, 13 வயதான மகன் ஆகாஷ் ஆகியோர் திண்டுக்கல் கொடைரோடு அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். விழுப்புரத்தில் நடந்த சம்பவத்தில், மூன்று குழந்தைகளும் இறக்கப் போவது தெரியாமலேயே இறந்துவிட்டன. ஆனால் திண்டுக்கல்லில் இறக்கப் போகிறோம் எனத் தெரிந்தே இரண்டு குழந்தைகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளன. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என அரசு, தன்னார்வ அமைப்புகள், ஊடகங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருந்தாலும், தற்கொலைகள் நின்றபாடில்லை.
திண்டுக்கல்லில் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர், கோயில், சுற்றுலா தலம் எனப் பல இடங்களில் சுற்றிவிட்டு, கடைசியில் ரயில் முன்பாகப் பாய்ந்திருக்கிறார்கள். கார்த்திகை தீபம் அன்று திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பி ரயில் நிலையம் வந்திருக்கின்றனர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலமாகக் கொடைரோடு ரயில் நிலையத்தில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து கொடைக்கானலுக்குச் சென்றிருக்கிறார்கள்.

உத்தராபதி குடும்பத்தினர்
ஒரு நாள் முழுவதும் கொடைக்கானலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு, நேற்று மாலை மீண்டும் கொடைரோடு ரயில் நிலையம் வந்திருக்கிறார்கள். அங்கிருந்த உணவகத்தில் அனைவரும் வயிறார உணவருந்தி இருக்கிறார்கள். அதன் பிறகு இரவு 7 மணி முதல் நடைமேடையில் தங்கி இருந்திருக்கிறார்கள்.
இரவு 11 மணிக்கு மதுரை-திண்டுக்கல் சிறப்பு ரயில் முன்பாக நால்வரும் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீஸார் உடல் பாகங்களைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். இறந்தவர்களிடம் இருந்த ஆதார் கார்டு மூலமாக முகவரியைத் தெரிந்து, உறவினர்களுக்குத் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள் போலீஸார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை