September 28, 2021 Tuesday 10.56 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 14 2019 3:37 AM

காயங்கள் --கவிதை

Posted Date : Dec 14 2019 3:37 AM

பேட்டரித் தீர்ந்த 
திசைக்கருவியாய்
நடுக்கடலில் எனை
வீசியெறிந்திருக்கிறாய்

உத்தேசங்களை 
புகுத்தியிருக்கும் 
கப்பலின் சக்கரத்திற்கு
மாலுமியும் நீயேதான்.

மறந்துவிடாதே..

வரைபடக் கிழிசல்களில்
 கோடுகள் வரையும்
 அமாவாசை இருளில்
 துழவியபடியே  துடுப்பை 
 செலுத்திக் கொண்டிருக்கிறாய்.

வலமாக சுழலும் கடிகார
பயணத்தில் 
எலும்பைப்போல 
தேய்ந்துக் கொண்டிருக்கும்
என் வயதை
நாட்குறிப்புகளில் சேமித்திருக்கிறேன்.

சிரட்டையில் 
மோதி நிற்கும் கடலுக்கு
ஆட்காட்டி விரலில் 
சுழலெழுப்புகிறாய்.

இப்போது 
என் வலுவிழந்த
கரங்களில் இருப்பதெல்லாம்
நகமொடிந்து
பாழடைந்த 
உள்ளங்கை மட்டுமே.பேட்டரித் தீர்ந்த 
திசைக்கருவியாய்
நடுக்கடலில் எனை
வீசியெறிந்திருக்கிறாய்

உத்தேசங்களை 
புகுத்தியிருக்கும் 
கப்பலின் சக்கரத்திற்கு
மாலுமியும் நீயேதான்.

மறந்துவிடாதே..

வரைபடக் கிழிசல்களில்
 கோடுகள் வரையும்
 அமாவாசை இருளில்
 துழவியபடியே  துடுப்பை 
 செலுத்திக் கொண்டிருக்கிறாய்.

வலமாக சுழலும் கடிகார
பயணத்தில் 
எலும்பைப்போல 
தேய்ந்துக் கொண்டிருக்கும்
என் வயதை
நாட்குறிப்புகளில் சேமித்திருக்கிறேன்.

சிரட்டையில் 
மோதி நிற்கும் கடலுக்கு
ஆட்காட்டி விரலில் 
சுழலெழுப்புகிறாய்.

இப்போது 
என் வலுவிழந்த
கரங்களில் இருப்பதெல்லாம்
நகமொடிந்து
பாழடைந்த 
உள்ளங்கை மட்டுமே.

 

--பவித்ரா பாண்டியராஜ்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை