January 29, 2020 Wednesday 02.21 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 17 2019 5:22 PM

ஐசிசியின், சிறந்த ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஸ்மிருதி மந்தனா !!

Posted Date : Dec 17 2019 5:22 PM

ஒவ்வொரு நாட்டின் அணிகளிலிருந்தும் ஆண்டின் சிறந்த அணியை தேர்வு செய்து கவுரவித்து வரும் ஐசிசியின், 2019ம் ஆண்டிற்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஸ்மிருதி மந்தனா இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவின் மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனையாக வலம்வருபவர் மும்பையைச் சேர்ந்த 23 வயதான ஸ்மிருதி மந்தனா. 2013ம் ஆண்டில் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான ஸ்மிருதி மந்தனா இதுவரை 51 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
இரு வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஐசிசி புதிய கவுரவம் அளித்துள்ளது.
ஆண்டுதோரும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை ஐசிசி வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த மகளிர் அணிகளை இன்று ஐசிசி வெளியிட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை