September 25, 2020 Friday 03.18 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 18 2019 12:17 PM

ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் சதம் வெ.இண்டீஸ்க்கு இமாலய இலக்கு !!!

Posted Date : Dec 18 2019 12:17 PM

மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் அடுத்தடுத்து சதம் அடித்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி களம் இறங்கி விளையாடி வருகிறது. துவக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தனர்
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் 107 பந்துகளில் சதம் அடித்தார். ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து மற்றொரு துவக்க ஆட்டக் காரர் கே.எல். ராகுலும் சதம் அடித்து அசத்தினார்.
சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயம் இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்ல மேற்கிந்திய தீவுகள் கவனம் செலுத்தி வருகிறது

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை