January 29, 2020 Wednesday 01.26 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 28 2019 3:24 PM

2020ம் ஆண்டு இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் விவரம்

Posted Date : Dec 28 2019 3:24 PM

விராட் கோலி தலைமையில், 2020ம் ஆண்டு இந்திய அணி விளையாடவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் விவரத்தை தற்போது பார்க்கலாம்.
#INDvsSL : ஜனவரி மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இலங்கை அணி, 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இப்போட்டிகள் ஜன.5ம் தேதி தொடங்கி ஜன.10ம் தேதி வரை நடைபெறுகிறது.
#INDvsAUS : அடுத்ததாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிகள் ஜனவரி 14ம் தேதி தொடங்கி ஜன.19ம் தேதி வரை நடைபெறுகிறது.
#INDvsNZ : பின்னர் ஜனவரி மாத இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 டி20, 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது, இப்போட்டிகள் ஜன. 24ம் தேதி தொடங்கி மார்ச் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
#INDvsSA : நியூசிலாந்து உடனான போட்டிகளுக்கு பிறகு தாய் நாடு திரும்பும் இந்திய அணி அங்கு தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இப்போட்டிகள் மார்ச் 12ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது.
#IPL2020 : மார்ச் 28-ம் தேதி முதல் மே 24-ம்தேதி வரை 2 மாதங்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்க இருப்பதால், இந்திய அணி வேறு எந்த தொடர்களிலும் பங்கேற்கவில்லை.
#INDvsSL : பின்னர் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
#INDvsENG : செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியுடன் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
#INDvsAUS : பின்னர் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
#INDvsAUS : அக்டோபர் 2020ல், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரை டிசம்பர் மாத இறுதியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இப்போட்டிகள் 2021 ஜனவரி மாதம் வரை நடைபெற இருக்கிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை