January 29, 2020 Wednesday 02.33 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 6 2020 4:05 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இவருக்கு 15 நாள் பரோல்

Posted Date : Jan 6 2020 4:05 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் விடுப்பு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவரது தாயார் ராஜேஸ்வரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது இதுவரை 4 முறை ரவிச்சந்திரன் விடுப்பில் சென்று விட்டு சிறைக்கு திரும்பும் வரை எவ்விதமான அசம்பாவிதங்களும் நிகழவில்லை என நீதிபதிகள் கூறினர். தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ளதால் ஜனவரி 10 முதல் 25ம் தேதி வரை 15 நாட்களுக்கு ரவிசந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கியும் நீதிபதிகள் உத்தவிட்டனர். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை