January 29, 2020 Wednesday 02.31 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 6 2020 4:08 PM

22 வயது கல்லூரி மாணவி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு

Posted Date : Jan 6 2020 4:08 PM


      தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வில்லியவரம்பல் ஊராட்சி மன்ற தலைவராக 22 வயதான பிஎட் படிக்கும் மாணவி துர்கா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு 317 வாக்குகள் பெற்று துர்காதேவி வெற்றி பெற்றார். 
இவரது வெற்றியை பாராட்டும் வகையில் அப்பகுதி மக்கள் துர்காதேவிக்கு சால்வைகள் அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை தம்மால் தர முடியும் என்றும், இப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த ஊராட்சிக்கு செய்து கொடுப்பேன் என்றும் துர்கா தேவி தெரிவித்துள்ளார். 
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இளம்வயதினரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். கிருஷ்ணகிரியில் 21 வயது கல்லூரி மாணவி சந்தியாராணி வெற்றி பெற்றது சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை