January 29, 2020 Wednesday 12.20 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 7 2020 11:26 AM

JNU தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்...!

Posted Date : Jan 7 2020 11:26 AM

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்குள்ள தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மற்றொரு இடத்தில் நடைபெற்ற போராட்டத்தில், பாலிவுட் நட்சத்திரங்கள் அனுராக் காஷ்யப், டாப்ஸி, ஜோயா அக்தர், தியா மிர்சா உட்பட பலர் பங்கேற்று டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
டெல்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற கண்டன பேரணியில் தீப்பந்தத்தை ஏந்திச்சென்று இளைஞர் காங்கிரசார் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதவி விலகுமாறும் முழக்கமிட்டனர்.
இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் இடங்களான பல்கலைக்கழகங்களை அரசியல் மேடை ஆக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியுடன் தெரிவித்த அவர், பல்கலைக்கழகத்தின் மாண்பை பேணி காக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை