September 26, 2020 Saturday 12.44 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 7 2020 8:48 AM

ஆபாச படம் காண்பித்து சிறுமிக்கு துன்புறுத்தல்.

Posted Date : Jan 7 2020 8:48 AM

சென்னையில் 13 வயது சிறுமியை மிரட்டி ஆபாச படங்களை காண்பித்து துன்புறுத்தி வந்த 68 வயதான அதிமுக பிரமுகரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 
சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து செல்போனில் வைத்திருப்பவர்கள், பதிவேற்றும் நபர்கள் என தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் 13 வயது பள்ளிச் சிறுமியை ஆபாச படங்களை காண்பித்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த பாளையம் என்ற ரவி என்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இந்த நபர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
8ம் வகுப்பு படித்த வந்த சிறுமியை தனது வீட்டின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று தனது செல்போனில் வைத்திருந்த வீடியோக்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பக்கத்து வீட்டில் வசித்த ஒருவர், இதனை பார்த்து குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்க அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியை மீட்டு அவரிடம் விசாரித்த போது, கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து இது போன்று துன்புறுத்தி வந்ததும், இது பற்றி வெளியில் கூற கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அதிமுக பிரமுகர் ரவியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாளையம் ரவியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சிறார் ஆபாச படங்களை வைத்திருந்தாலே 10 ஆண்டு வரை சிறை என கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை செய்திருந்த நிலையில், சிறார் ஆபாச படத்தை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை