August 11, 2020 Tuesday 03.36 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 7 2020 10:54 AM

ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர்! ஈரான் அரசு சேனல் அறிவிப்பு

Posted Date : Jan 7 2020 10:54 AM

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பணம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ சேனலில் செய்தி வெளியிடப்பட்டது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மேலும், உளவுப் பிரிவுத்தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த காசிம் சுலைமானியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இந்த இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வு அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலில் வெளியானது. அந்த நிகழ்வின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் வழங்கப்படும். ஈரானில் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில், அதனைக் கணக்கில் கொண்டு 80 மில்லியன் டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை