January 29, 2020 Wednesday 01.48 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 7 2020 4:26 PM

ஏடிஎம் இயந்திரங்களில் நூதன திருட்டு... உதவுவது போல் நடித்து கைவரிசை காட்டிய நபர் கைது

Posted Date : Jan 7 2020 4:26 PM

கோவையில் ஏடிஎம்களில் பணம் எடுக்க உதவுவதாக பொது மக்களை ஏமாற்றி நூதன முறையில் பணம் திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் போததனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இவர் ஊர் காவல் படையில் பணியாற்றி வருவதோடு, பண்ணை பால் வாங்கி பாட்டிலில் அடைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

சிட்கோ பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் சுரேஷ்குமார் பணம் எடுக்க சென்ற போது, அருகேயிருந்த நபர் பணம் எடுக்க உதவுவதாக கூறியுள்ளார். அதை நம்பி ஏடிஎம் கார்டை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். பணம் வராததால் ஏடிஎம் கார்டை திரும்ப பெற்று கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது வங்கி கணக்கில் இருந்து 19,500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.


தனது ஏடிஎம் கார்டை அந்த நபர் எடுத்து கொண்டு, வேறொரு கார்டை கொடுத்து பணத்தை திருடி இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக சுரேஷ்குமார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஏடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய காவல் துறையினர், விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கதிரேசன் (48) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல பல இடங்களில் கதிரேசன் பணம் திருடியது தெரியவந்ததை தொடர்ந்து, போலீசார் கைது செய்யப்பட்ட கதிரேசனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை