September 26, 2020 Saturday 02.34 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 7 2020 10:58 AM

பொங்கல் பண்டிகைக்காக 24,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்... முன்பதிவு எப்போது?

Posted Date : Jan 7 2020 10:58 AM

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்து முன்பதிவு 9-ம் தேதியில் இருந்து தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போதும் பொங்கல் சிறப்பு பேருந்து ஜனவரி மாதம் 11ம் தேதியில் இருந்தே இயக்கப்படும். அதற்கான முன்பதிவை 9-ம் தேதியில் இருந்து தொடங்கி 14-ம் தேதி வரை இணையதளம் மற்றும் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே 2020 பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவுகள் வரும் 9-ம் தேதி காலை 9 மணி அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 24,000-திற்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்  பொங்கலையொட்டி இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து மட்டும் 14,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், பூவிருந்தவல்லியில் 4 கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை