August 06, 2020 Thursday 11.58 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 8 2020 10:17 AM

“மீன் உணவை சாப்பிட்டால் புற்றுநோய் வராது” அமைச்சர் ஜெயக்குமார்

Posted Date : Jan 8 2020 10:17 AM

உலகில் மீனைவிட சிறந்த உணவு எதுவும் இருக்காது எனவும், மீன் உணவை சாப்பிட்டால் புற்றுநோய் வராது எனவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின் போது பேசிய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்லா, ரோகு,  ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், வீராணம் ஏரியில் நவீன ரக மீன்வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உலகத்தில் மீனை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது எனவும், மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை