January 29, 2020 Wednesday 01.41 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 8 2020 4:16 PM

அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 80 பேர் பலி, 200 பேர் படுகாயம்

Posted Date : Jan 8 2020 4:16 PM

இராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் இருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணைகளை வீசி புதன்கிழமை தாக்குதல் நடத்தியது.
இதில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 80 பேர் கொல்லப்பட்டதாகவும், 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அமெரிக்க பயங்கரவாதிகள் 80 பேர் கொல்லப்பட்டனர், மேலும் அந்நாட்டின் ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல அழிக்கப்பட்டுள்ளதாக தெஹ்ரானை மையமாகக் கொண்டு இயங்கும் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்நாட்டுக்கு தொடர்புடைய 104 இடங்களின் மீது குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை