August 11, 2020 Tuesday 02.59 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 8 2020 10:49 AM

போலீஸ் வாகனத்தின் மீது ஏறி டிக்டாக்: இளைஞர்களுக்கு காவல் கண்காணிப்பாளரின் வித்தியாச தண்டனை

Posted Date : Jan 8 2020 10:49 AM

வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஏறி டிக்டாக் செய்த இளைஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வித்தியாச தண்டனை அளித்துள்ளார்.

தூத்துக்குடி மில்லர்புரம் அருகே உள்ள ஏ.ஆர் ஆயுதப்படை முன்பு வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று டிக்டாக் செய்தவர்கள் மூன்று பேரை தென்பாகம் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் லெவஞ்புரம் பகுதியைச் சேர்ந்த கோகில கிருஷ்ணன் (17)மற்றும் முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பலவேசம் மகன் சேகுவரா(21) மற்றும் லெவஞ்புரம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் சீனு உள்ளிட்ட மூன்று பேர் என்பது தெரியவந்தது.

செய்த தவறை உணர்ந்து, இனிமேல் இதுபோன்ற எந்த தவறும் செய்ய மாட்டோம் என மன்னிப்புக் கேட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறுக்காக நூதன முறையில் இன்று ஒருநாள் காலை முதல் மாலை வரை தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் முன்பு நின்று போக்குவரத்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுளார். அதன்படி மூன்று இளைஞர்களும் சாலைப் போக்குவரத்தை காலை முதல் சரி செய்து வருகின்றது

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை