December 03, 2021 Friday 10.18 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 21 2020 4:52 AM

சுங்கச்சாவடி முறைகேடுகள் வெளிவராத உண்மைகள்

Posted Date : Jan 21 2020 4:52 AM

     பிப்ரவரி 13,2015 அன்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் நாடு முழுவதும் 125 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்றும் அதில் 74 சுங்கச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, 61 சுங்கச்சாவடிகள் ஏற்கனவே மூடப்ப்ட்டுவிட்டன என்று தெரிவிக்கிறார்.

   அதே ஆண்டு மாநிலங்களுக்கான தரைவழி போக்குவரத்து துறையின்  அன்றைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் 30.4.2015 அன்று நாடு முழுவதும் 62 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன என பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதில் அளிக்கிறார்.

   இதனை  அடிப்படையாக கொண்டு மக்கள் பாதை பேரியக்கம் மேற்கொண்ட RTI  தகவலில் NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA,SOUTHERN REGION கிண்டி சென்னை அலுவலகமானது தமிழகத்தில் சுங்கச்சாவடி எதும் மூடப்படவில்லை என்றும்,கட்டணங்கள் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்றும் மேலும் கட்டண வசூலிப்பு நிரந்தரமானது (PERPETUAL) எனும் தகவல் அளித்தது.

  தமிழகம் முழுவதும் 600KM  க்கும் அதிகமான மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    அதே சமயம் மத்திய தரை வழி துறை அமைச்சகமானது நாடு முழுவதும் 41 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுவிட்டதாக தகவல் அளித்தது.அசாம் 2 ,சட்டிஸ்கர் 3 ,குஜராத் 2 , இமாச்சலம் 2,கர்நாடகம் 3,கேரளா 5 ,மத்திய பிரதேசம் 1, மகராஸ்ட்ரா 4 ,ஒடிசா 1, ராஜஸ்தான் 2 , உத்தரகாண்ட் 2,உத்திர பிரதேஷ் 15.

  ஆனால் NHAI ஆணையமும் ,62 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுவிட்டன அதன் விவரத்தை அங்கிகரிக்கப்பட்ட இணையதளத்தில் www.tis.nhai.gov.in செய்திபிரிவில் காணலாம் என்றது.அதன்படி தமிழகத்தில் ஆந்திர பிரதேஷ் 1,கேரளா4,ராஜஸ்தான் 6,பீகார் 4,மத்திய பிரதேஸ் 4,தமிழ் நாடு 2, சட்டிஸ்கர் 2, மகராஸ்ட்ரா 4,தெலுங்கானா 1,குஜராத் 3,மணிப்பூர் 4,உத்திர பிரதேசம் 18,கர்நாடகா 4, ஒடிசா 3, உத்ரகாண்ட் 2 என்பனவாகும்.

ஒரே துறையின் கீழ் மூன்று வெவ்வேறு தகவல்களானது மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டை பிரதிபலிக்கிறது.

ROAD AND INFTRASTUCTURE DEVELOPMENT என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு, 
 1,சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணத்தை வசூலிக்கின்றன,
 2. மத்திய நிதி அமைச்சகத்தின் ROAD AND INFRASTRUCTURE CESS என்கிற பெயரில் இந்திய மக்களாகிய நாம் பயன்படுத்தும் ஒவ்வோரு லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு ரூபாய் 9 வீதமாக வசூலிக்கிறது.அதன்படி 2016-2017 ஆம் ஆண்டு டீசல் 76 ,பெட்ரோல் 23.8 மொத்தம் 99.80 மில்லியன் டன் ,2017-2018 ஆம் ஆண்டு டீசல் 81.1 ,பெட்ரோல் 26.2 மொத்தம் 107.3 மில்லியன் டன்,2018-2019 ஆம் ஆண்டு டீசல் 83.5,பெட்ரோல் 28.3 மொத்தம் 111.8 மில்லியன் டன் பயன்பாட்டின் மூலம் கடந்த மூன்றாண்டில் மட்டும் சுமார் மூணு லட்சம் கோடி ரூபாயை கண்ணுக்கு தெரியாமல் நம்மிடமிருந்து மத்திய அரசு பிடிங்கியுள்ளது.

இந்த லட்சணத்தில் நாம் வாங்குகிற ஒவ்வொரு மோட்டார் வாகனத்திற்கும்
4 சதவிதம் வரை சாலைவரி  வசூலிக்கிறது.

வண்டி வாங்கும் போது சாலை வரி கட்டுகிறோம்,அந்த வண்டியை ஒட்டுவதற்கு போடக்கூடிய பெட்ரோல், டீசலுக்கு தனியாக வரி கட்டுகிறோம் ,அந்த வண்டியை சாலையில் ஒட்டிச்செல்ல சுங்கச்சாவடியிலும் வரி கட்டுகிறோம்.

ஒரே பெயரில் நம்மை கசக்கி பிளியும் மத்திய அரசின் அராஜகப்போக்கிற்க்கு மாநில அரசு துணை போவது ,மாநில அரசின் அறியாமையை காட்டுகிறது.
 

Comments Here

  • Panneer selvam Jan 21,2020 | 10:03 AM

    கேடுகெட்ட அடிமை அரசியல் உள்ளவரை இதுபோன்ற செயல்பாடுகள் மட்டுமல்ல இதைவிட இன்னும் கேடுகெட்ட செயல்பாடுகளும் அரங்கேறும் அதை கேள்வி கேட்காமல் தான் அடிமை அரசியலும் இது போன்ற செயல்கள் மென்மேலும் அதிகரித்தாலும