December 03, 2021 Friday 09.09 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 21 2020 5:30 AM

அரசு குடும்பத்தில் ஒரு அசுரன் !

Posted Date : Jan 21 2020 5:30 AM

அசுரன் என்பவன் பல உயிர்களை கொன்று புதைப்பவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை . மற்றொரு மனிதனின் வாழ்விற்க்காக தன் வாழ்வை அர்ப்பணிப்பு செய்ய கூடியவானகவும் இருக்கலாம் .
உலக அரங்கில் , நாற்காலிக்கு சண்டை போட்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ... தனக்கான கிரீடத்தை கழட்டி வைத்துவிட்டார் " ஹேரி " ...

சார்லஸ் - டயானா அவர்களின் இரண்டாவது மகன் ஹேரி . இவர் ,   மேகன் மார்கெல் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் , தானும் தன் மனைவியும் அரசு குடும்பத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார் . இது பெரும் சர்ச்சையையும் , அதை நேரத்தில் வரவேற்பையும் பெற்று உள்ளது .

ஜனவரி மாதம் , 19 ம் தேதி சஸ்ஸெக்ஸ் என்ற இடத்தில் , தான் விலகுவதற்க்கான காரணத்தை மக்கள் முன் வெளிப்படையாக கூறினார் . 


2006 ம் ஆண்டு நானும் , எனது நண்பனும் இளவரசருமான செகிஷோவும் இணைந்து உருவாக்கிய சென்டேபலே என்கிற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தோம் .. எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி யால் பாதிக்கபட்டோர்களுக்கு , என் அம்மாவின் வழியில் உதவுவதற்காக தொடங்கினோம் .

நீங்கள் சில வாரமாக கேள்விபட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம் , நான் அரசு குடும்பத்தில் இருந்து விலகுவதாக என்கிற செய்தியினை ..
அந்த உண்மையை இப்போது உங்கள் முன் கூற விரும்புகிறேன் .. என்னை ஒரு இளவரசனாக , இந்த மாகாணத்தின் அதிபதியாக மட்டுமில்லாமல் என்னை ஹேரி என்ற மனிதனாகவும் கடந்த 35 ஆண்டுகளாக எனது வளர்ச்சியை நீங்கள் கண் முன்னே பார்த்து இருப்பீர்கள் ..

இங்கிலாந்து தான் எனது தாய் வீடு .. அதை தான் விரும்புகிறேன் .அதில் எந்த மாற்றமும் இல்லை ..

எனக்கு எப்போதும் நீங்கள் ஆதரவு தந்து உள்ளீர்கள் . குறிப்பாக , நான் மேகன் மார்கெல்லவை மணம் முடிக்கும் போது நீங்கள் திறந்த கரங்களுடன் வரவேற்றதைப் பார்த்தேன் ..

இந்த முடிவு உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல .. மிக நீண்ட நாட்களாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு , எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவு ..மேலும் , இந்த சமயத்தில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் .. நாங்கள் , ஒரு போதும் உங்களிடம் இருந்து விலகிச் செல்லவில்லை .. எங்களுடைய கனவும் , நோக்கமும் தொடர்ச்சியாக ராணிக்கும் , காமன்வெல்த்திற்கும் , இராணுவ அமைப்புகளுக்கும் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதே .. ஆனால் , அது பொது நிதி இல்லாமல் , துரதிர்ஷ்டவசமாக அது சாத்தியமில்லை ..

14 ஆண்டுகளுக்கு முன்பு நான் இப்போது நிறுவிய இந்த தொண்டுக்கான எனது பணியும் அர்ப்பணிப்பும் ஒருபோதும் வீழ்ச்சியடையாது. எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் உண்மையான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் பணியைத் தொடருவோம்.  செய்ய நிறைய இருக்கிறது, ஆனால் இது உங்களைப் போன்றவர்களிடமிருந்து ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும் ... 1,10,000 மக்கள் இன்றளவில் ஹெச்.ஐ.வி  யுடன் போராடி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..

இங்கிலாந்து நாட்டின் மக்கள் வரிப்பணத்தில் தான்,  இன்றைய அரசு குடும்பத்திற்க்கான செலவினங்கள் செய்யப்படுகிறது .அதை விரும்பாத ஹேரி , அரசு குடும்பத்திலிருந்து  விலகியிருப்பது ஒரு தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது . 


உலகெங்கும் மக்களாட்சி மலர்ந்திருகின்ற  சமயத்தில் , தன்னுடைய கிரீடத்தை கழட்டி வைத்த ஹேரியின் முடிவுக்கு ஒரு ராயல் சல்யூட் !  
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை