December 06, 2020 Sunday 06.53 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 23 2020 6:02 AM

மறக்கமுடியாத விடுதலை போராட்ட வீரரின் வரலாறு !!!

Posted Date : Jan 23 2020 6:02 AM

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக உருவாக்கப்பட்ட ராணுவத்தில் இருந்தது  வடமாநிலத்தவர்கள்  மட்டும் அல்ல !! பாதிக்குமேல் தமிழர்கள் !! அதனால்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சொன்னார்  நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று .
    தன் வாழ்நாள் முழுவதும் நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவின் கட்டாக் பகுதியில் பிறந்தார். தனது கல்வி பயணத்தை வெளிநாடுகளில் கழித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்தியாவில் நடந்த மிகக் கோரமான ஜாலியன் வாலாபாத் படுகொலைக்கு கண்ணீர் வடித்தார்.  ஒன்றும் அறியாத மக்களை நீண்ட  சுவர்களுக்குள் ரத்தம் தெறிக்க சுற்றுக் கொண்ட இந்த கொடிய மிருகங்களை எதிர்க்கவே , நாட்டை மீண்டும் விடுதலை பெற செய்யவே  நேதாஜி இந்தியா வந்தார் .

      முதலில் காங்கிரஸில் இருந்தவர் இந்திய சட்டசபையில் இந்தியர்கள் பெரும்பான்மையை பெற்றால் ஆங்கிலேயர்களை எதிர்க்க முடியும் என நினைத்தார். அதற்காக பல பிரச்சாரங்களை செய்தார். இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஆங்கிலேயர்களின் பலவீனத்தை உணர்ந்து நேதாஜி அவர்களை எதிர்க்க இதுதான் சரியான வழி என தீர்மானித்தார் .       
         காங்கிரசின் தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் நேதாஜியின் செல்வாக்கை கண்டு அஞ்சிய காந்தி அவருக்கு எதிராக இரண்டு மூன்று பேரை நிறுத்தினார் .ஆனால் இறுதியில் நேதாஜி வெற்றி பெற்றார் .சில முரண்பாடுகளால் காங்கிரசை விட்டு வெளியேறிய நேதாஜி போரின் மூலம் தான் இந்த சுதந்திரத்தை பெற முடியும் என நம்பினார். அதற்காக ஒரு ராணுவத்தை உருவாக்கினார் .பல நாடுகளும் பயணம் செய்து பல நாட்டவரின் ஆதரவைப் பெற்றார்.
     இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸ் ராணுவ படைக்கு ஆட்கள் தேவை பட்டபோது தமிழகத்திலிருந்து சுபாஷ் சுபாஷ் சந்திர போஸுக்கு முத்துராமலிங்க தேவர் தமிழக இளைஞர்களை அனுப்பிவிட்டார்.  1944ம் ஆண்டு நடந்த ஆங்கிலேயர்களுக்கும் பார்வர்டு பிளாக்கும் இடையான சண்டையில் நேதாஜியின்  படை தோற்றது . அன்று வானொலியில் நேதாஜி “நமது படை கண்டிப்பாக ஒருநாள் ஜெயிக்கும்” என நம்பிக்கை அளித்தார்       
        அடுத்த சில தினங்களில் நேதாஜி விமான பயணத்தின் போது இறந்து விட்டதாக தகவல் பரவியது .இன்றைய வரையில் அவர் இழப்புக்கான மர்மம் புதிராகவே உள்ளது.
  “ உங்கள் ரத்தத்தை கொடுங்கள் நான் சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிறேன் “என வீர முழக்கமிட்ட தன்னலமற்ற ஒரு தலைவனே தலைவனாய் வாழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை