October 22, 2021 Friday 05.30 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 23 2020 11:55 PM

99 தேர்வர்கள் தகுதி நீக்கம் - டிஎன்பிஎஸ்சி முறைகேடு !

Posted Date : Jan 23 2020 11:55 PM

கடந்த ஆண்டு செப்டம்பர் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய 40 பேர் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால், தேர்வு மையங்களில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை உறுதி செய்ய பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்திற்கு உட்பட்ட அந்த தேர்வர்களின் வினாத்தாள்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதனால், அந்த தேர்வர்களைக் கடந்த 13 ஆம் தேதி நேரில் அழைத்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரித்தனர். அதில் பல பேர் ஒரே மாதிரியான பதிலை அளித்தது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் படி, குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்களில் நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுக்கிறது என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்ட மற்றும் சந்தேகத்திற்குரிய தேர்வர்களின் பட்டியலில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தகுதி நீக்கம் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், வாழ்நாள் முழுவதும் அவர்கள் தேர்வு எழுத முடியாத படி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி- இன் இந்த நடவடிக்கை இனிமேல் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வழிவகுக்கும் என்று பல தேர்வர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை