February 22, 2020 Saturday 12.10 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 24 2020 11:20 AM

மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்ட ஏரிகளுக்கு திருப்பிவிட டெண்டரை இறுதிசெய்ய இடைக்கால தடை

Posted Date : Jan 24 2020 11:20 AM

   மேட்டூர் அணை உபரி நீரை, சரபங்கா பேசின் வழியாக சேலம் மாவட்ட ஏரி- குளங்களுக்கு திருப்பிவிடுவதற்கான டெண்டரை இறுதிசெய்ய, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
  தமிழக பொதுப்பணித்துறை, 449 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அறிவித்த இத்திட்டத்திற்கான டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி, சேலத்தை சேர்ந்த அருள்நம்பி இஞ்சினியரிங் கன்சல்டன்ட் என்ற நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
  டெண்டர் நடைமுறைகளுக்கு 30 நாட்கள் தரப்பட வேண்டும் என விதிகள் உள்ள நிலையில், 15 நாட்கள் மட்டுமே தரப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், டெண்டர் நடைமுறைகளை தொடரலாம், ஆனால் டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை