February 22, 2020 Saturday 11.55 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 24 2020 11:46 AM

பாதுகாப்பு உபகரணமின்றி வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் . இந்த நிலை என்று மாறுமோ ?

Posted Date : Jan 24 2020 11:46 AM

திருவாடானை:

திருவாடானையில் கையுறை உட்பட பாதுகாப்பு உபகரணமின்றி, உயிருக்கு ஆபத்தான முறையில் துப்புரவு தொழிலாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்கின்றனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒன்றியத்தில் தொண்டி பேரூராட்சி மற்றும் 47 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதிகளில் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யவும், அப்பகுதியில் சேரும் குப்பைகளை அகற்றவும், துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

இதனால் கையுறை கூட இல்லாமல் ஆபத்தான முறையில் பணியாற்றி வருகின்றனர். அடைப்பு உள்ள பகுதிகளிலும் கால்வாய்க்குள் சென்று சுத்தம் செய்வதால், விஷவாயு தாக்கி உயிர் பலியாகும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''திருவாடானை பகுதியில் துப்புரவு பணிகளை செய்ய போதிய தொழிலாளர்கள் இல்லாத நிலை இருந்து வருகிறது.

ஆனால், அவர்களுக்கும் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. குறிப்பாக அவர்களுக்கு தேவையான, கையுறை உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படவில்லை. கழிவுநீர் கால்வாயில் இறங்கி சாக்கடையில் கைவைத்து சுத்தம் செய்கின்றனர். தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை